5 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்? உண்மை இதுதான்
5 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பரவிய தகவலுக்கு இந்தியா ஆதாரம் வெளியிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர்` என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது.
இந்தியா விளக்கம்
இதனையடுத்து பல பாகிஸ்தான் ஊடகங்கள், ரஃபேல் உட்பட 5 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதாக கூறின. சில விமான பாகங்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின. ஆனால், இதனை மறுத்துள்ள இந்திய அரசு அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டிருக்கிறது.
இந்நிலையில், பழைய சம்பவங்களில் விமானங்கள் விபத்துக்குள்ளான படங்களை உண்மையை திரித்து பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் மிக்-21 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்தப் புகைப்படத்தை திரித்து ரஃபேல் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தவறாக பரப்பப்படுகிறது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
