21 வயது இளம்பெண் திருவனந்தபுரத்தின் மேயராகிறார்

#india #election #thiruvananthapuram
By Jon Dec 26, 2020 11:06 AM GMT
Report

திருவனந்தபுரம் மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் என்ற இளம் பெண் தேர்வாகியுள்ளார்.

கேரளத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில், முடவன்முகல் வார்டில் போட்டியிட்ட, 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரன் பெயரை, மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு தேர்வு செய்துள்ளது.

இதனை மாநிலக் கமிட்டி ஏற்று இறுதி முடிவை சனிக்கிழமை அறிவிக்க உள்ளது. இந்தியா வரலாற்றிலே மிகவும் குறைந்த வயதில் மேயரானவர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Gallery