கொரோனா: ஐ.நா அளித்த உதவியை நிராகரித்த மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை புதிய உச்சத்தில் உள்ள நிலையில் ஐ.நா அளித்த உதவிகளை இந்தியா நிராகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. தினசரி இறப்புகளை 3000ஐ கடந்துள்ளன.
இந்த நிலையில் இந்தியாவுக்கு உதவ பல்வேறு உலக நாடுகளும் முன்வந்துள்ளன. ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை பல நாடுகளும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றன.

அதே போல் ஐக்கிய நாடுகள் சபையும் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது. இந்தியாவில் விநியோகத்திற்கு தேவையான கட்டமைப்புகளை வழங்க ஐ.நா முன்வந்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் இந்தியாவின் விநியோக கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாகவும் ஐ.நாவின் உதவி தேவையில்லை என இந்திய அரசு மறுத்துவிட்டது.
எந்த நேரத்திலும் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.