இந்தியா கொரோனா இறப்பை குறைத்து கூறுகிறதா? - வாஷிங்டன் பல்கலைகழகம் அறிக்கை
இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பேராசிரியர் பினா அகர்வால் கூறுகையில்: ‘தடுப்பூசிகள் மற்றும் மருந்துவ முறைகளை கையாள்வதில் நாடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வால் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.
இந்திய அரசு போதுமான தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்கவும், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தவும் தவறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறைத்து கூறப்படுகிறதா மரண எண்ணிக்கை:
இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் அலை ஏற்பட்ட காலகட்டத்தில் ஒரு லட்சம் பேர் இறந்தனர்.
ஆனால், தற்போது கொரோனா இரண்டாவது அலையில்ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமையை காட்டிலும் இந்தியாவின் நிலைமை மேலும் மோசமடையலாம் என கூறுகின்றனர் ஆராய்சியாளர்கள்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவும் சழற்சி முறையினை இந்தியா இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என ஒரு ஆய்வு கூறியுள்ளது.
மேலும் ,இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை குறைத்து சொல்லபடுவதாகவும். மொத்த இறப்பு எண்ணிக்கை 2.74 லட்சம் என புள்ளி விபரம் கூறினாலும் .
சரியான எண்ணிக்கை 7.5 லட்சமாக இருக்கலாம் எனவும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இறப்பு எண்ணிக்கை சுமார் 15 லட்சமாக அதிகரிக்கலாம் என. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் மேட்ரிக்ஸ் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இதுவரை பி1.617, பி1.617.2 வகை கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆனால், மிகப்பெரிய ஆபத்தை தரக்கூடிய பிரிட்டனில் கண்டறியப்பட்ட ‘பி1.1.7’ வைரஸ்களும் இந்தியாவில் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.