தாண்டவமாடும் கொரோனா; 10 ஆயிரத்தை கடந்த பாதிப்பு - மக்கள் கலக்கம்
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 10,000 ஐ கடந்துள்ளது.
கொரோனா
2 ஆண்டுகளுக்கு மேலாக தாண்டவமாடிய கொரோனா ஒருவழியாக குறைந்து நாடுகள் பழைய நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தன் வேலையை காட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று 10,158 ஆகப் பதிவாகியுள்ளது.

16 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாகக் கேரளாவில் 761 பேர் தொற்றினால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, ஹிரியானா, உத்திர பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து உயர்வைக் கண்டுவருகின்றனர்.
பாதிப்பு அதிகரிப்பு
தமிழ்நாடு பொருத்தவரை புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 ஆக உள்ளது. 198 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாடு பொருத்தவரை புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது. 243 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,489 ஆக உயர்ந்துள்ளது.