இந்தியாவில் ஒரே நாளில் 6,148 கொரோனா மரணங்கள் பதிவாக காரணம் என்ன?

India Lockdown Covid Death
By mohanelango Jun 10, 2021 05:22 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக இரண்டாம் அலையின் பாதிப்புகள் குறைந்த வண்ணம் உள்ளன.

தினசரி கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளன. ஆனால் மரணங்கள் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று மட்டும் 6,148 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. உலகத்தின் எந்தவொரு நாட்டிலும் பதிவான அதிகபட்ச ஒருநாள் கொரோனா மரணம் இதுவே.

அதற்கு சில தினங்கள் முன்னதாக கொரோனா மரணங்கள் 3,000-க்கும் குறைவாக இருந்த நிலையில் திடீரென 6 ஆயிரத்துக்கும் அதிகமாக காரணம் என்னவென பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. பீகார் கொரோனா மரணங்களை கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் 3,951 மரணங்கள் அம்மாநிலத்தின் கணக்கில் பதிவாகாமல் இருந்ததாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பீகாரின் கொரோனா மரணங்கள் ஒரே நாளில் 9,429 ஆக அதிகரித்தது. இந்த 3,951 மரணங்கள் இன்றைய கணக்கில் சேர்க்கப்பட்டதால் தான் இந்தியாவில் ஒருநாள் மரணங்கள் 6 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.