இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு: அதிகரிக்கும் மரணங்கள்- வெளியான அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என நாளுக்கு நாள் நிலைமை கைமீறி சென்று கொண்டிருக்கிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகளும், முன்கள பணியாளர்களும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் புரோனோ நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 2,67,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா மரணங்கள் 4,000-த்தை தாண்டியதாக உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 4,525 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதனால் ஒருநாளின் கொரோனாவால் அதிகபட்ச மரணங்கள் நிகழ்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.