ஊரடங்கால் இந்தியாவில் இத்தனை ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பா? - அதிர்ச்சி தகவல்
கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோருக்கு எய்ட்ஸ் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் பரவி லட்சணக்கான மனித உயிர்களை பலி வாங்கியது. இதனால் 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 2 ஆண்டுகாலமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது.

இதில் கிட்டதட்ட 6 மாத காலம் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்கள் பலரும் இதனால் வீட்டிற்கு உள்ளேயே முடங்கினார்கள். மேலும் இந்த காலக்கட்டத்தில் பலர் காண்டம் இல்லாமல் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கார் என்ற நபர் ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு பதில் அளித்துள்ளது. அதில் இந்தியாவில் கடந்த 2020-21 ஆண்டுகளில் மட்டும் 85268 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பாதுகாப்பற்ற பாலியல் உறவு கொண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகமாக மஹாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக 10498 பேருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இம்மாநிலத்தில் தான் அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதற்கு அடுத்ததாக ஆந்திரப்பிரதேசத்தில் 9521 பேருக்கும், கர்நாடகாவில் 8947 பேருக்கும், மத்தியப்பிரதேசத்தில் 3037 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 2757 பேருக்கும் எய்ட்ஸ் ஏற்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.