தகனம் செய்ய சென்ற 16 பேருக்கு எதிர்பாராத விதமாக அதுவே இறுதி நிமிடமாக அமைந்தது

By Jon Jan 04, 2021 01:07 PM GMT
Report

உயிரிழந்தவரின் உடலை தகனம் செய்ய சென்றவர்கள் 17 பேர் எதிர்ப்பாராத விதமாக நடந்த விபத்தில் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் வசித்துவந்த ராம்தான் என்பவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, ராம்தானின்ன் உறவினர்கள் அவரது உடலை தகனம் செய்வதற்காக முரத்நகரில் உள்ள இடுகாட்டு தகன மேடைக்கு கொண்டு சென்றனர். 50-க்கும் அதிகமானோர் இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்ததையடுத்து, துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் தகன மேடை அமைந்துள்ள பகுதியில் நின்றுகொண்டிருந்தனர்.

ஆனால், தகன மேடையின் மேற்கூரை பாழடைந்து இருந்தது, அதில் புனரமைப்பு நடைபெற்று பாதிப்பணிகள் முடிவந்த நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் மழை அதிகமாக இருந்ததால் தகன மேடையின் மேற்கூரை வலுவிழந்த இடிந்து விழுந்தது.

இதில் தகன மேற்கூரைக்கு கீழ் நின்று கொண்டிருந்த 17 பேர் மீதும் விழுந்ததில் சம்பவ இடத்திலே இடத்திலே உயிரிழந்தனர். 38 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.