தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

india delta tamilnadu
By Jon Jan 12, 2021 09:08 AM GMT
Report

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகரில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 13.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அரியலூரில் 10 செ.மீ, நாகையில் 8 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.