அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் – ராகுல்காந்தி டுவிட்
சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என்று ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர்- 25ம் தேதியிலிருந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவீட்டர் பக்கத்தில், ‘சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்’ என பதிவிட்டுள்ளார்.
देश के अन्नदाता ने सत्याग्रह से अहंकार का सर झुका दिया।
— Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2021
अन्याय के खिलाफ़ ये जीत मुबारक हो!
जय हिंद, जय हिंद का किसान!#FarmersProtest https://t.co/enrWm6f3Sq