லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா போராட்டம் - கடும் சிரமத்திற்கு பிறகு லக்கிம்பூர் சென்றடைந்தார்

india-ragul-polictics
By Nandhini Oct 06, 2021 11:27 AM GMT
Report

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டதையடுத்து, லக்கிம்பூர் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி என்னுமிடத்தில் சாலையில் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, பின்புறமாகக் காரை ஏற்றி 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதற்கு காரணமான இந்திய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.

இந்நிலையில், இந்த விபத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவிலியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்திக்க டெல்லியிலிருந்து லக்னோ சென்ற ராகுல்காந்திக்கு, லக்னோ விமான நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்தார்கள்.

இதனால் அவர் லக்னோ விமான நிலையத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி, 'எந்த விதிகளின் அடிப்படையில் என்னை தடுத்து நிறுத்திகிறீர்கள்' என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இறுதியாக ராகுல்காந்தியை தனது வாகனத்தில் லக்கிம்பூர் கேஹ்ரிக்கு செல்ல காவல்துறை அனுமதித்தார்கள். 

லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா போராட்டம் - கடும் சிரமத்திற்கு பிறகு லக்கிம்பூர் சென்றடைந்தார் | India Ragul Polictics

லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா போராட்டம் - கடும் சிரமத்திற்கு பிறகு லக்கிம்பூர் சென்றடைந்தார் | India Ragul Polictics