பாகிஸ்தானுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்தியா
ந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தானுக்கு இலவசமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க பல நாடுகள் தடுப்பூசியை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டன. இதில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், பூட்டான் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் இலவசமாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இ
ந்நிலையில், பாகிஸ்தானுக்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, சுமார் 40 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து பாகிஸ்தானுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இது தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி கவி (GAVI) மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் என்றும், இது, அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில், சுமார் 20 சதவீத மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது.