விவசாயிகளின் போராட்டதை திசைதிருப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

INDIA MODI FARMERS
By Jon Dec 27, 2020 01:23 PM GMT
Report

டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேசாமல் போராட்டத்தை திசை திருப்பும் வேளையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாடியுள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியில் எல்லையை முற்றுகையிட்டு, கடந்த மாதம் 25ம் தேதி முதல்,விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேசாமல் போராட்டத்தை திசை திருப்பும் வேளையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாடியுள்ளார்.

மேலும்,விளைபொருட்களை மாநில அரசுகள் கொள்முதல் செய்வதை தடுக்கும் அம்சங்களும், புதிய வேளாண் சட்டத்தில் உள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் தோன்றி விவசாயிகளுக்காக கவலைப்படும் மோடி பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண முன்வரவில்லை என்று மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.