இந்தியாவின் தன்னம்பிக்கை உச்சத்தில் உள்ளது - நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை...!

India Draupadi Murmu
By Nandhini Jan 31, 2023 06:08 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். 

அப்போது அவர் பேசுகையில், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 3 ஆண்டுகளில் சுமார் 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

ஏழைக் குடும்பங்கள் இதன் மூலம் அதிகபட்ச பலனைப் பெறுகின்றனர். இன்று, இந்தியாவின் தன்னம்பிக்கை உச்சத்தில் உள்ளது. உலகிற்கு இந்தியா தீர்வுகளை வழங்கி வருகிறது.

இன்று, நாட்டில் நிலையான, அச்சமற்ற மற்றும் தீர்க்கமான அரசாங்கம் உள்ளது, அது பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வது முதல் முத்தலாக் ஒழிப்பு வரை எனது அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி என்பதில் எனது அரசு தெளிவான கருத்தை கொண்டுள்ளது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை எனது அரசு நிறைவேற்றியது. 

சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை வரை, எல்ஏசி மற்றும் எல்ஏசிக்கு தகுந்த பதிலடி கொடுப்பது, ஜே,கே சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்தல் மற்றும் முத்தலாக் ஒழிப்பு வரை, இந்த அரசாங்கத்தின் அடையாளம் தீர்க்கமான ஒன்றாக உள்ளது.

இவ்வாறு உரை நிகழ்த்தினார்.   

Budget Session -President Droupadi Murmu