முதல்வரை கொன்றால் ரூ.10 லட்சம் -பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!
பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங்கை கொலை செய்பவருக்கு, ரூ 10 லட்சம் வழங்கப்படும்என்ற சுவரொட்டி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாபின் மொகாலி நகரின் வழிகாட்டி பலகையில்,ஒட்டப்பட்ட சுவரொட்டியில் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்கை கொலை செய்யும் நபருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அச்சிடப்பட்டு இருந்தது.
மேலும் அந்த சுவ்ரொட்டியில் ஒரு, இ - மெயில்முகவரியும் குறிப்பிடப்பட்டு இருந்தது , சுவரொட்டியை கைப்பற்றிய போலீசார், முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வழக்குப்பதிவு செய்ததுடன், விசாரணையினை,சைபர் கிரைம்' பிரிவிற்கு மாற்றியுள்ளனர்.
முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு, ஏற்கனவே காலிஸ்தான் பயங்கரவாதிகள்கொலை மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.