முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் - சீனியர் வீரர் நீக்கம்?
இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்கவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது.ரோஹித் சர்மா, ஜடேஜா உள்பட சீனியர் வீரர்கள் பலர் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாததால் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படும் நிலையில் 5வது நிலையில் யாரை இறக்கலாம் என்ற குழப்பம் நிலவுவதாக துணை கேப்டன் கே.எல்.ராகுல் கூறியிருந்தார்.
தொடர்ந்து சொதப்பி வரும் சீனியர் வீரரான ரஹானேவிற்கு இடம் கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ள நிலையில், பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்த தொடரின் முதல் போட்டி என்பதால் ஷர்துல் தாகூரை விட இஷாந்த் சர்மாவிற்கே முன்னுரிமை கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.
இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனில் மயங்க் அகர்வால், கே.எல் ராகுல், விராட் கோலி, புஜாரா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.