3வது போட்டிக்கான இந்திய அணியில் முக்கிய வீரர்கள் நீக்கம் - வெளியான புதிய தகவல்
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய வீரர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இதனால் 3வது போட்டியில் இதுவரை வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே நாளை நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டிக்கான உத்தேச வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் கடந்த போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய சாஹல், ஷர்துல் தாகூர் மற்றும் வாசிங்டன் சுந்தருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், ஆவேஸ் கான், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.