‘ஏன் இப்படி பண்றீங்க…’ மாநிலங்களவையில் கண்கலங்கி பேசிய வெங்கையா நாயுடு!
மாநிலங்களவை மாண்பை எம்.பிக்கள் பாதுகாக்கவில்லை என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்கலங்கி பேசினார்.
கடந்த மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அந்த சமயத்தில் பெகாசஸ் செயலி மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களது செல்போன்களை மத்திய அரசு ஒட்டு கேட்டு வருவதாக வெளியான தகவல்களையடுத்து, எதிர்க் கட்சியினரை அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த 2 வாரத்துக்கு மேலாக அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, நேற்று நடைபெற்ற கூட்டத் தொடரின் போது, ஓபிசி மசோதா பிரிவில் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா அமைதியான முறையில் நிறைவேறியது. நேற்றைய கூட்டத்தொடரின் போது எம்.பிக்கள் மேஜை மீது ஏறி கடும் அமளியில் ஈடுபட்டார்கள்.
இதனால், நேற்று நடைபெற்ற கூட்டத் தொடரில் ஓபிசி மசோதா பிரிவில் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா அமைதியான முறையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவை மீண்டும் கூடியது.அவையின் தொடக்கத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு பேசுகையில், மாநிலங்களவையில் எம்பிக்களின் செயல்பாடு எல்லை மீறி செல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வழிபாட்டு தலம் போன்ற புனிதமான மாநிலங்களவை மாண்பை எம்பிக்கள் பாதுகாக்க தவறிவிட்டார்கள் என்று பேசிக்கொண்டிருந்த போது அவர் குரல் தழுதழுத்து கண் கலங்கி கண்ணீர் சிந்தினார்.
கண்ணீர் மல்க அவர் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்கட்சிகள் மீண்டும் முழக்கம் எழுப்ப ஆரம்பித்தனர். இதனால், அவை தேதி குறிப்பிடாமல் மறுபடியும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, அமளியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெங்கையா நாயுடு முடிவு செய்துள்ளார்.
