புதிய நாடாளுமன்றம் கட்ட தடையில்லை - உச்சநீதிமன்றம் அனுமதி

india-poltical-bjp
By Jon Jan 05, 2021 01:04 PM GMT
Report

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா சமயத்தில் உள்ள பொருளாதார நெருக்கடியில் இந்த ஆடம்பரம் தேவையா என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரண்டு நீதிபதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளனர்.

கட்டுமானப் பணிகளின் போது, சுற்றுச்சூழலை காக்கும் வகையில் தூசி பரவலை தடுக்கத் தேவையான கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் அமரக்கூடிய வகையில் கட்டப்படவுள்ளது.

அதன் கட்டுமானப் பணிகளை வரும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய தலைமைச் செயலகத்தை 2024-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், கடந்த நவம்பா் மாதம் 5-ஆம் தேதி வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தது.

எனினும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அடிக்கல் மட்டும் நாட்டுவதற்கு கடந்த டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த திட்டத்துக்கு டிசம்பா் 10-ஆம் தேதி பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, சென்ட்ரல் விஸ்டா திட்ட வழக்கில், புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.