‘நீங்க தான் திருடர்கள்..’ மகனைப் பற்றி கேள்வி எழுப்பியதால் ஆவேசமான மத்திய அமைச்சர் - வைரல் வீடியோ

anger india-politics- union-minister
By Nandhini Dec 16, 2021 04:38 AM GMT
Report

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மகன் பற்றி கேள்விகேட்ட பத்திரிகையாளர்களை, நீங்க தான் திருடர்கள் என்று மத்திய அமைச்சர் ஆவேசமாக பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த ஊரான திகுனியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக இருந்தது.

அப்போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் திரண்டு சாலையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது கார் மோதியதில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம், பத்திரிகையாளர்கள், அவர் மகன் மீதான குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அமைச்சர் கோபமடைந்து, இதில் எந்த அவமானம் உள்ளது. அவமானம் ஏதுமில்லை.

குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் தள்ளியது யாரும் இல்லை.. மீடியாவினர்தான். மீடியாவினர்தான் திருடர்கள். உங்கள் தொலைபேசியை அணைத்து விடுங்கள்.

உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? என்று கோபமாக பேசினார். அவர் கோபமாக பேசும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.