உங்களுடன் தை பொங்கல் கொண்டாட வருகிறேன்: தமிழில் டுவிட் செய்த ராகுல் காந்தி

pongal tamilnadu rahul
By Jon Jan 16, 2021 03:18 AM GMT
Report

உங்களுடன் தை பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன் என டுவிட் செய்துள்ளார் காங்கிரஸ் எம்பி-யான ராகுல் காந்தி. உலகமெங்கும் இன்று தமிழர் திருநாளான பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டியுள்ளன, இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனை காண்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மதியம் 12 மணியளவில் தமிழகம் வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய டுவிட்டர் பதிவில், அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தை பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.