பிரதமர் நரேந்திர மோடியின் உறவினர் கொரோனா தொற்றுக்கு பலி

india corona modi pm relative
By Praveen Apr 27, 2021 08:00 PM GMT
Report

இந்தியா பிரதமர் மோடியின் பெரியம்மா கொரோனவால் பாதிக்கப்பட்டு தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியின் பெரியம்மா நர்மதாபென் மோடி செவ்வாய்க்கிழமை அங்குள்ள சிவில் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 80.

நர்மதாபென் (80) தனது பிள்ளைகளுடன் அஹமதாபாத் நகரின் புதிய ரனிப் பகுதியில் வசித்து வந்தார்.

பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரஹலாத் மோடி கூறுகையில்,

'கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து எங்களுடைய பெரியம்மா நர்மதாபென் 10 நாட்களுக்கு முன்பு சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்' என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நர்மதாபென் இன்று மருத்துமனையில் உயிரிழந்ததாக பிரஹலாத் மோடி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.நர்மதாபென்னின் கணவர் ஜெக்ஜீவன்தாஸ் பிரதமர் மோடியின் தந்தை தாமோதரதாஸ் உடைய சகோதரர் ஆவார். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாக பிரஹலாத் மோடி கூறினார்.