கழட்டி விடப்படும் ஜடேஜா...3வது டெஸ்டில் இவருக்கு வாய்ப்பா?
இங்கிலாந்து அணியுடன் 3வது டெஸ்டில் விளையாடவுள்ள இந்திய அணி குறித்து முக்கியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது போட்டி வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியை பொறுத்தவரையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி மிடில் ஆர்டரில் சூர்ய குமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் புஜாரா அல்லது ரஹானே ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைக்கும். இதேபோல் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரவிச்சந்திர அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2 போட்டிகளிலும் ஜடேஜா விக்கெட் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் வழக்கம் போல் முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.