2வது ஒருநாள் போட்டியில் வெளியேற்றப்படும் வீரர்கள் - கே.எல்.ராகுலின் அதிரடி திட்டம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் அதிரடி மாற்றங்களை கேப்டன் கே.எல்.ராகுல் ஏற்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 19 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என வீரர்கள் சொதப்பியதால் தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் அந்த அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனிடையே 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் உள்ளதால் இப்போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
அதன்படி மிடில் ஆர்டரில் பேட்டிங் பலவீனமாக இருப்பதால், அதனை நிரப்ப சூர்யகுமார் யாதவ் அணிக்குள் கொண்டு வரப்படவுள்ளார். லோயர் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர் என அடுத்தடுத்து 2 அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளதால் வெங்கடேஷ் ஐயர் இப்போட்டியில் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல மற்றொரு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூரும் நீக்கப்படவுள்ளார். ஷர்துல் தாக்கூர் கடந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்தார். எனினும் அவரின் முக்கிய பணியான பவுலிங்கில் ஓவருக்கு சராசரியாக 7 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். எனவே அவரை நீக்கவிட்டு முழு நேர பவுலரான முகமது சிராஜிற்கு வாய்ப்பு கொடுக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
You May Like This