ஜப்பானை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - என்ன சாதனை தெரியுமா?
பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.
பொருளாதார நாடு
வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையின்படி வளர்ச்சி அளவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கடந்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜப்பானை விஞ்சியுள்ள இந்தியா, உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இந்தியா வலம் வருகிறது.
இந்தியா
வலுவான உள்நாட்டுத் தேவை, நிறுவன சீர்திருத்தங்கள், பணக் கொள்கைகள், விலை நிலைத்தன்மை உள்ளிட்டவற்றால் இது சாத்தியமாகியுள்ளது. தற்போதைய வேகம் தொடர்ந்தால்,
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஜெர்மனியையும் விஞ்சி இந்தியா மூன்றாவது இடத்தை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக அமெரிக்காவும் அதனையடுத்து சீனா 2ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.