பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி இறுதி ஊர்வலம் தொடங்கியது - மக்கள் கண்ணீர் அஞ்சலி

india-pipin-rawat-- funeral-procession-
By Nandhini Dec 10, 2021 10:26 AM GMT
Report

பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொங்கியது. குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 ராணுவ வீரர்கள் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு நேற்று இரவு 8 மணி அளவில் 13 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டன.

இதனையடுத்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகள் மலர் தூவியும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்களும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டன.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் திமுக எம்.பிக்கள் ஆகியோர் பிபின் ராவத் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகின்றது. கன்டோன்மென்ட் மயானத்தில் இருவரின் உடல்களும் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.