பிபின் ராவத்தின் உடலுக்கு அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்

india--pipin-rawat
By Nandhini Dec 10, 2021 05:13 AM GMT
Report

 முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் உடல் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிபின் ராவத்தின் 2 மகள்களும் கண்ணீர் மல்க தந்தை, தாயார் உடல் அருகே நின்றுக் கொண்டிருந்தனர். பிபின் ராவத் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிபின் ராவத் மகள்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து, அமித்ஷா ஆறுதல் கூறினார். பிபின் ராவத் உடலுக்கு ராணுவத்தினர், பொதுமக்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.