அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58ஆக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டுமே 7-ம் தேதி கொரோனா நெருக்கடி காலத்தின்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த அரசாணை அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் ஓராண்டுக்கு அதாவது 60 ஆக உயர்த்துவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஓய்வு வயது 60 ஆவதால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்குவது இந்த ஆண்டு மிச்சமாகும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்பு இருப்பதாகவும், அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தகக்து.