4 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் வாடிய 20 இந்திய மீனவர்கள் விடுதலை

india-pakisthan-fisher--release
By Nandhini 10 மாதங்கள் முன்

பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் அட்டாரி வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எல்லைத் தாண்டி மீன்களை பிடித்ததாக கூறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 20 மீனவர்களை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், மீனவர்கள் 20 பேரை பாகிஸ்தானின் லந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த 20 மீனவர்களும், அட்டாரி வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். மீனவர்கள் மற்றும் அவர்களது உடைமைகள் போலீசார் தீவிர சோதனை செய்தனர். பிறகு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

4 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் வாடிய 20 இந்திய மீனவர்கள் விடுதலை | India Pakisthan Fisher Release