இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து? - மரணத்தில் முடிந்த தாக்குதல் பஞ்சாயத்து
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டிகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பி.சி.சி.ஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பித்து விட்டது. இதில் முதல் சுற்று ஆட்டங்களும், பயிற்சி போட்டிகளிலும் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சூப்பர் 12 சுற்று ஆட்டங்களும் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் அதிகம் எதிர்பாக்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாதிகள் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி கொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுடன் நாம் உலகக்கோப்பைப் போட்டியில் ஆடுவதா என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆவேசமாக கூறி போட்டியை ரத்து செய்யுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் குல்காமில் காஷ்மீரைச் சாராத 2 தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக சுட்டதில் இருவர் பலியாகியுள்ளனர். ஒரு கார்பெண்ட்டரும், பானிபூரி விற்பவரும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இருவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதே கருத்தை பஞ்சாப் அமைச்சர் பர்கத் சிங்கும் தெரிவித்திருந்தார்.
,டி 20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட வேண்டும். ஏனென்றால் எல்லையில் நிலைமை சரியில்லை. இரு நாடுகளும் தற்போது அழுத்தமான காலகட்டத்தில் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் எதையும் செய்யக்கூடாது'' என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் கொலைகளை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை நிகழ்த்தி பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஐசிசி கட்டுப்பாட்டின் கீழ் நடந்து வருகிறது. ஐசிசியின் சர்வதேச போட்டிகளின் கீழ் நீங்கள் எந்த அணிக்கும் எதிராக விளையாட மறுக்க முடியாது. ஐசிசி போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
You May Like This

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
