பிரதமர் மோடி புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 8 ரயிலைகள் போக்குவரத்தை பச்சைக் கோடி அசைத்து இந்தியா பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதன்பின் பேசிய மோடி எம்ஜிஆர் அவரெழுத்து பிறந்த தினத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட ரயில் நிலையத்தில் இருந்தே இந்த ரயில் சேவை தொடங்கியது ஒரு தற்செயலான நிகழ்வு தான். அதுமட்டுமின்றி ஏழைகளுக்குத் தொண்டாற்றுவதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் எம்ஜிஆர் எனப் புகழாரம் சூட்டினார்.
ரயில் போக்குவரத்துத் தொடர்பு, ஒற்றுமைச் சிலையைச் சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கான வசதி மட்டுமல்லாமல், கேவாடியாவில் உள்ள பழங்குடியினரின் வாழ்வையும் மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.
இதனால் சொந்தத் தொழில் தொடங்குவது அதிகரித்துப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் குறிப்பிட்டார். ரயில்வேயின் வரலாற்றிலேயே நாட்டின் பல பகுதிகளில் இருந்து பல ரயில்கள் ஒரே இடத்துக்குச் செல்வது இதுவே முதன்முறை எனத் தெரிவித்தார்.