‘நாங்க வேற மாறி, வேற மாறி’ - முதல் நாள் ஆட்டத்தில் சதம் அடித்து விளாசிய மயங்க்

india newzealand virat kohli mayank agarwal testseries
By Thahir Dec 03, 2021 01:31 PM GMT
Report

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.

மைதானத்தில் பவுண்டரி கோடு அருகே ஈரப்பதம் காணப்பட்டதால் இன்றைய ஆட்டம் தாமதமாகவே தொடங்க பட்டது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஷுப்மான் கில் 44 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் அடுத்து வந்த புஜாரா, விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 90 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார்.

ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 119 பந்தில் அரைசதம் அடித்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் வெளியேறினார். இருந்தாலும் இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.

5-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால் உடன் சகா ஜோடி சேர்ந்தார். மயங்க் அகர்வால் 196 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் சிறப்பாக விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றி அசத்தினார்.

இதற்கிடையே இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்துள்ளது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சகா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.