ஆட்டம் காட்டும் கொரோனா: ஒரே நாளில் 21 பேர் பலி - அதிகரிக்கும் வாய்ப்பு!
கொரோனா பாதிப்பால் ஒரு நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா
2 ஆண்டுகளுக்கு மேலாக தாண்டவமாடிய கொரோனா ஒருவழியாக குறைந்து நாடுகள் பழைய நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தன் வேலையை காட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று 10,753 ஆக பதிவாகியுள்ளது.

தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,628 உள்ளது. மேலும் தொற்றினால் பாதிக்கப்பட்டு 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகமாகக் கேரளாவில் புதிதாக 1,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பு உயர்வு
தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் 485 பேர், ஹிரியானவில் 398 பேர், டெல்லியில் 349 பேர், ராஜஸ்தானில் 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு உட்பட சத்தீஸ்கர், குஜராத், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.
இதனால், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.