இந்திய கடற்படையில் மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பல் இணைக்கப்பட்டுள்ளது

sea army ship
By Jon Feb 16, 2021 03:10 PM GMT
Report

இந்தியா கடற்படையில் மேலும் ஒரு நீர் மூழ்கிக் கப்பல் சேர்க்கப்பட்டன. மும்பைக்கு அருகே உள்ள மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் கட்டப்பட்ட டீசல் மற்றும் மின் மோட்டார்களால் இயங்கும் தாக்குதல் ரக நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ். கரான்ச் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கப்பல் அடுத்த மாதம் 10 முதல் 15 ஆம் தேதிக்குள் இந்திய கடற்படை பணியை தொடங்குமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.

221 அடி நீளமும், 40 அடி உயரமும் கொண்ட அந்த கப்பலில் 8 அதிகாரிகள் உள்பட 43 பேர் பணியாற்ற உள்ளனர். தொடர்ந்து 50 நாட்கள் நீரில் மூழ்கி பயணிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல்,12000 கி.மீட்டர் தூரத்திற்கு இடைநில்லாமல் செல்லும் வல்லமையும் கொண்டது. நீருக்கு அடியில் மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த கப்பல் ஒரே நேரத்தில் 18 நீரடி ஏவுகணைகளை ஏவி தாக்கும் திறன் கொண்டது.