‘என் உடம்புல மைக்ரோ சிப் இருக்கு... என்னை யாரோ இயக்குகிறார்கள்...’ - அஜித் தோவல் வீட்டில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டில் மர்ம நபர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு உரியவராக கருதப்படும் அஜித் தோவல் தற்போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இவர் இந்தியாவின் ‘ஜேம்ஸ் பான்ட்’ என்று அழைக்கப்படுகிறார்.
டெல்லி ஜன்பாத் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று காலை வாடகை டாக்சியில் வந்த ஒரு நபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்துள்ளார். அந்த நபரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைதான நபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், என்னுடைய உடம்பில் மைக்ரோ சிப் இருப்பதாகவும், தன்னை வேறு ஒருவர் இயக்குவதாகவும், அவர்கள் இயக்கியதால் தான் நான் அங்கு வந்தேன். நானாக அங்கு வரவில்லை பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனால், போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். இதனையடுத்து இவர் மனநிலைமை பாதிக்கப்பட்டவரா அல்லது இவர் சொன்னபடி உடம்பில் சிப் வைக்கப்பட்டுள்ளதா என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.