வளமான இந்தியாவை கட்டமைத்தவர் வாஜ்பாய் -பிரதமர் மோடி புகழாரம்
#india #modi #vaajbai
By Jon
வளமான இந்தியாவை கட்டமைக்க வாஜ்பாய் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிடுள்ள செய்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக கூறினார்.
மேலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றதாகவும், வலுவான வளமான இந்தியாவை உருவாக்க அவர் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவு கூறத் தக்கவை என்றும் கூறி உள்ளார்.