திருவள்ளுவர் குறித்து தமிழில் டுவிட் போட்ட பிரதமர் மோடி
திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி திருவள்ளுவரைப் பற்றி தமிழில் ட்விட் போட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தை 2ம் நாளான திருவள்ளுவர் தினத்தை தமிழக மக்களை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
உலகிற்கு தேவையான அனைத்து அறிவுரைகளையும் தனது திருக்குறளின் மூலமாக உலகிற்கு பறைசாற்றியவர் திருவள்ளுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரை நினைவு கூர்ந்து தமிழில் பதிவு செய்துள்ளார். அது வருமாறு:- போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன்.
அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன. மேலும் உலக இளைஞர்கள் அனைவரும் திருக்குறளைப் படிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.