பிரதமர் மோடியை சிறைபிடித்த விவசாயிகள்... அந்த திக் திக் நிமிடங்கள்... - இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

india modi struggle punjab farmers
By Nandhini Jan 07, 2022 08:13 AM GMT
Report

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார். இந்நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் பஞ்சாப் வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்தார். அப்போது, மோசமான வானிலை கரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, சாலையாக பிரதமர் புறசென்றார். அப்போது, பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் அப்படியே நின்றது.

இதனையடுத்து, பிரதமரின் வருகை, திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

பாதுகாப்பு குறைபாடு குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதன் பின்பு, உடனடியாக பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பிச் சென்றார். விமான நிலையம் சென்ற பிரதமர், நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன்.

உங்கள் முதல்வருக்கு அதற்காக நான் நன்றி சொன்னேன் என்று சொல்லிவிடுங்கள் என்று பதிண்டா விமான நிலையத்திலிருந்த பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இவ்வாறு, பிரதமர் சென்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து பஞ்சாப் அரசு மீது பாஜகவினர் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து, பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழுவை பஞ்சாப் அரசு அமைத்திருக்கிறது. இந்த உயர்மட்டக்குழு 3 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் பாலத்தில் நின்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -