சிங்கள மொழி பகவத் கீதை நூலை பிரதமர் மோடிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்சே வழங்கினார்

india-modi-meeting
By Nandhini Oct 20, 2021 09:29 AM GMT
Report

சிங்கள மொழி பகவத் கீதை நூலை பிரதமர் மோடிக்கு பரிசாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சே வழங்கியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புத்த மதத்தினரின் புனித தலமான குஷி நகரில் புத்தர் தனது 80வது வயதில் படுத்த கோலத்தில் மகாபரிநிர்வாணம் அடைந்துள்ளார். எனவே இதன் நினைவாக அப்பகுதியில் ஒரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த காட்சியும் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நகரை உலம் எங்கும் உள்ள புத்த மதத்தலங்களுடன் இணைக்கும் விதமாக அப்பகுதியில் 260 கோடி செலவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கிறார். இந்நிகழ்வில், மஹிந்த ராஜபக்சேவின் மகன், நாமல் ராஜபக்சே கலந்துகொண்டார். அப்போது பிரதமர் மோடிக்கு அவர், சிங்கள மொழி பகவத் கீதை நூலை பரிசாக வழங்கினார். 

சிங்கள மொழி பகவத் கீதை நூலை பிரதமர் மோடிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்சே வழங்கினார் | India Modi Meeting