பிரதமர் மோடி கொடுத்த ஐடியா - குப்பையால் கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா?
சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி ஒரு விஷயத்தை செய்தார். அந்த விஷயம் அதிகாரிகள் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அது என்னவென்றால், கடந்த 1967 - 2014 வரை மத்திய அரசுக்கு வந்த பழைய கடிதங்கள் - கட்டு கட்டாக சாஸ்திரி பவன், உத்யோக் பவன் என மத்திய அரசின் அலுவலகங்களில் இடத்தை அடைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இவற்றையெல்லாம் ஆய்வு செய்து பழைய பேப்பர் கடைக்கு போட்டு விடுங்கள் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதனையடுத்து, ஒரு மூத்த அதிகாரி தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்த பழைய குப்பையை ஆராய்ந்து கடைக்கு போடப்பட்டுள்ளது. பல லாரிகளில் இந்த குப்பைகளை ஏற்றிச் செல்லப்பட்டது. குப்பைகளை எடைக்குப் போட்டதால், இதன் வாயிலாக அரசுக்கு 4.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
