‘கண் கலங்கின மோடி’ - விமர்சனம் செய்து சிக்கலில் சிக்குன காங். மூத்த தலைவர்கள்!
உணர்ச்சிவசப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி கண் கலங்கி கண்ணீர் விட்டு அழுததை ‘முதலைக்கண்ணீர்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்ததால் சிக்கலில் சிக்கி உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சுகாதார பணியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்கள் கொரோனா பணிக்காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் பிரதமரிடம் பகிர்ந்தனர்.அப்போது, சுகாதார பணியாளர்களை பாராட்டி பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி கண்ணீர் விட்டார் மோடி.
இதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோடி ‘முதலைக் கண்ணீர்’ வடிக்கிறார் என்று விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் முகப்பு பக்கத்தில் மோடியின் புகைப்படத்தைப் போட்டு அதில் மோடி குறித்து விமர்சிக்கபட்டிருந்தது என்று ஒரு இமேஜ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதை காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பிரபல பத்திரிக்கையாளர் ஷோபா டே உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர். ஆனால், உண்மையில் இது நியூயார்க் டைம்ஸில் முகப்பு பக்கத்தில் வரவில்லை. போலியாக சித்தரிக்கப்பட்டது என்ற தகவல் வெளிவந்தது. ஒரு பொய்யான செய்தியைப் பகிர்ந்ததால் காங்கிரஸ் உள்ளிட்ட பிரபலங்களுக்கு தற்போது சிக்கல் வந்துள்ளது.