நாட்டின் இளவயது மேயராக பதவியேற்றார் ஆர்யா ராஜேந்திரன்
india
world meyar
By Jon
கேரளாவின் திருவனந்தபுரம் கார்ப்பரேஷனின் இளைய மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் இன்று பதவியேற்றார். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.
இங்குள்ள முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்ட ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரை மேயராக்க அக்கட்சி முடிவு செய்தது, இதன்படி இன்று ஆர்யா ராஜேந்திரன் மேயராக பதவியேற்றுக் கொண்டார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் நவ்ஜோத் கோசா புதிய மேயருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது குறிப்பிடத்தக்கது.