இந்தியாவில் இனி பறக்கும் பேருந்து - அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

Shri Nitin Jairam Gadkar Delhi India
By Sumathi Jul 30, 2022 05:27 AM GMT
Report

இந்தியாவில் விரைவில் ‘ஸ்கை பஸ்’ எனப்படும் பறக்கும் பேருந்துகளை தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பறக்கும் பேருந்து

 ஸ்கை பஸ் என்பது மெட்ரோ ரயில் போலவே இருக்கும் ஒரு ரயில்வே அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம். எரிபொருளுக்கு மாற்றாக மின்சார ஆற்றலைப் பயன்படுத்தி இயக்கலாம்.

இந்தியாவில் இனி பறக்கும் பேருந்து - அமைச்சர் நிதின் கட்கரி தகவல்! | India May Soon Introduce Skybuses Nitin Katkari

இதனால் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித் தடங்களில் ஸ்கை பஸ் சேவை விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

நிதின் கட்கரி

அப்போது அவர் இதுகுறித்து பேசியதாவது, டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்கான வழிகளை ஆய்வுசெய்து வருகிறோம். டீசல் பேருந்துகளை இயக்குவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது.

இந்தியாவில் இனி பறக்கும் பேருந்து - அமைச்சர் நிதின் கட்கரி தகவல்! | India May Soon Introduce Skybuses Nitin Katkari

ஆகையால், இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மெட்ரோ ரெயில் போன்ற போக்குவரத்து அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம்.

இந்தியாவில் விரைவில்...

இந்தியாவின் முதல் பறக்கும் பேருந்து டெல்லி மற்றும் அரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால் நாட்டின் அனைத்து பெருநகரங்களுக்கும் பறக்கும் பேருந்துகள் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.