57 மின்விசிறிகளை 1 நிமிடத்தில் நாக்கால் நிறுத்தி சாதனை - வைரலாகும் வீடியோ
இந்தியர் ஒருவர் 57 மின்விசிறிகளை நாக்கால் 1 நிமிடத்தில் நிறுத்தி சாதனை படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை
கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற உலகம் முழுவதும் பலரும் பல சாதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்தியர் ஒருவர் சமீபத்தில் செய்த சாதனை இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டையைச் சேர்ந்தவர் கிராந்தி குமார் பணிகேரா(Kranthi Kumar Panikera). இவர் இத்தாலியின் லோ ஷோ டீ ரெக்கார்ட்(Lo Show Dei Record) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
57 மின்விசிறிகள்
இந்த நிகழ்வில் சுழலும் 57 மின்விசிறிகளை ஒரு நிமிடத்தில் தனது நாக்கால் நிறுத்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த சாதனையை அவர் படைக்கும் போது அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
Most electric fan blades stopped using the tongue in one minute 👅 57 by Kranthi Drillman 🇮🇳 pic.twitter.com/dsH8FULHxW
— Guinness World Records (@GWR) January 2, 2025
இந்த சாதனை வீடியோவை கின்னஸ் அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ 18 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. முறையான பயிற்சி இல்லாமல் இவ்வாறு செய்வது ஆபத்தில் முடியும்