ஜன.1 முதல் அமலாகும் அதிரடி மாற்றங்கள் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க
8-வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 20% முதல் 35% வரை உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025-ல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.25% ஆகக் குறைத்ததைத் தொடர்ந்து, 2026 தொடக்கத்தில் வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான EMI குறைய வாய்ப்புள்ளது.
CNG மற்றும் PNG விலைகள் குறையக்கூடும். இது வாகன ஓட்டிகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும் நல்ல செய்தியாக மாறும்.
கிரெடிட் ஸ்கோர் (Credit Score) விவரங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக, வாரம் ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் வரவுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு முக்கிய நகரங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. குறிப்பாக இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் புதிய வாகனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விதிகள் மாறக்கூடும்.