இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வி - ரசிகர்கள் வேதனை

Thahir
in கிரிக்கெட்Report this article
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 72 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர்.
சிறப்பான தொடக்கம் அளித்த இரு வீரர்களும் அரைசதம் கடந்தனர். நிசங்கா 52 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த அசலங்கா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய குனதிலகா 1 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய மெண்டிஸ் 57 ரன்கள் குவித்தார்.
இறுதியில், 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 174 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆசியகோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா அணி

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த மக்களின் தங்கங்கள்.....! அரசின் முக்கிய அறிவிப்பு IBC Tamil
