இவரை எடுத்தது தான் இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் - இன்சமாம் உல் ஹக் ஓபன் டாக்: ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தான் அணியுடனான இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்தான தனது கருத்தை முன்னாள் பாகிஸ்தான் வீரரான இன்சமாம் உல் ஹக் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர்பார்கப்பட்ட போட்டியான இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்றுநோக்கியிருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வேலையே வைக்காமல் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டி முடிந்து இரண்டு நாட்கள் நிறைவடைந்துவிட்டாலும், இந்த போட்டி குறித்தான விவாதங்கள் இன்னும் குறைந்த பாடில்லை. முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியின் தோல்வி மற்றும் பாகிஸ்தான் அணியின் வெற்றி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக், இந்திய அணியின் தோல்வி குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து இன்சமாம் உல் ஹக் பேசுகையில், “ஹர்திக் பாண்டியாவுடன் களமிறங்கியதே இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்ததாக நான் கருதுகிறேன்.
ஹர்திக் பாண்டியாவை ஆடும் லெவனில் இணைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளதால் அவர்களது ஆடும் லெவனில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு அந்த பிரச்சனை இல்லை, அவர் மிக சரியாக தனது ஆடும் லெவனை தேர்வு செய்துவிட்டார்.
ஹர்திக் பாண்டியாவால் பந்துவீச முடியாவிட்டால் அவரது இடத்தில் வேறு ஒருவரை சேர்ப்பதே இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
