ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கியில் போராடி தோற்றது இந்தியா!

Olympics2020 Hockey Tokyo indiavsArgentina
By Irumporai Aug 04, 2021 12:03 PM GMT
Report

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியினை தழுவியது அர்ஜெண்டினா அணிக்கு எதிரான அரையிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியினை தழுவியது.


இந்திய மகளிா் ஹாக்கி அணி தனது காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.

இன்று நடைபெற்ற ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 2-வது நிமிடத்திலேயே கோலடித்து அசத்தியது இந்திய மகளிர் அணி. பெனால்டி கார்னரில் குர்ஜித் கெளர் கோல் அடித்தார்.

இதனால் ஆட்டத்தின் முதல் பகுதியில் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 2-வது பகுதியின் தொடக்கத்தில் பெனால்டி கார்னர் மூலமாக ஆர்ஜென்டீனா கோலடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.

முதல் பாதியின் இறுதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமனில் இருந்தன. 3-ம் பகுதியில் மேலும் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது ஆர்ஜென்டீனா. இறுதியில் 2-1 என இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து ஆக.6ல் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டன் அணியினை இந்திய அணி எதிர்கொள்கின்றது.