நீங்க யாரு பக்கம் ? இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா , யார் பக்கம் நிற்கும் இந்தியா?

USwarning Russian oil warningIndia
By Irumporai Mar 16, 2022 11:48 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் ரஷ்யா போரால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

மேலும், ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நிறுத்த உள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளதுஇந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்க முடிவு செய்து உள்ளது.

தற்போது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் உள்ளதால் முதல் கட்டமாக 35 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே விரைவில் கையெழுத்தாக உள்ளது. 

நீங்க யாரு பக்கம் ? இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா , யார் பக்கம் நிற்கும் இந்தியா? | India Iolating Sanctions But Russian Oil Deal

ஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை சந்தை மதிப்பை விட பீப்பாய்க்கு 20 முதல் 25 டாலர் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்குவது இந்தியாவை வரலாற்றின் தவறான பக்கத்தில் நிலைநிறுத்தும் என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில்:

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை பிற நாடுகள் கடைப்பிடிக்கவேண்டும். ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கினால் அது அமெரிக்காவின் தடைகளை மீறும் நடவடிக்கையாகும்.

மேலும், இந்தியா எந்த பக்கம் நிற்க விரும்புகிறது? என்பது பற்றி சிந்திக்க தோன்றும். ரஷியாவிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவை வரலாற்றின் தவறான பக்கத்தில் நிலைநிறுத்தும் என்றார்